காதலுக்காக கைதியான தம்பதி
கோலாலம்பூர்:
மலேசியாவில் இருக்கும் கணவன், மனைவி இருவரும் உண்மையிலேயே காதலுக்காகவிலங்குடன் சிறையிலிருக்கப் போகிறார்கள்.
காதலர் தினத்தையொட்டி பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.மலேசியாவில் உள்ள ரேடியோ நிலையம் வித்தியாசமான போட்டியை நடத்தியது.
அதன்படி தனது நேயர்களில் 10 ஜோடியைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குபலவிதமான போட்டிகளை நடத்துகிறது. ஜாகிங், ஷாப்பிங், பெளலிங் உள்பட பலபிரிவுகளைக் கொண்டது இது. அதில் ஒன்றுதான் கையில் விலங்குடன் சிறையில்வாசம் புரிவது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் ஜோடிக்கு 2,632 டாலர் பரிசு கிடைக்கும். இதைவெல்லத்தான், காதலியுடன் சிறை வாசம் புரியப் போகிறார் பல்தீப் சிங். இவருடன்சிறையில் இருக்கப் போகிறவர் இந்தர்ஜித் கெளர்.
உண்மையான விலங்குடன் ஒரு வார காலம் இவர்கள் சிறையில் இருப்பார்கள்.போட்டி குறித்து இந்தர்ஜித் கெளர் கூறுகையில், எங்களுக்கு சிறிது பதட்டமாகத்தான்இருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டமும் எங்கள் பக்கம் இருந்தால் நாங்கள் வெற்றிபெறுவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications