சொத்து வழக்கு: விசாரிக்கக் கோருகிறார் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது சுமத்தப்பட்ட வழக்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் ஆஜராகி சென்னைமேயர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சென்னை மேயர் ஸ்டாலின் மீது சமூக சேவகர் சென்பகமூர்த்தி என்பவர் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை நீதிமன்றத்திற்கு வந்த ஸ்டாலின், கோர்ட்டில் ஆஜராகி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் தன் மீதான புகாரைவிசாரிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். சம்மன் அனுப்பாதபோது, ஸ்டாலின் கோர்ட்டுக்கு வர வேண்டியதன் அவசியம குறித்து நீதிபதிஅசோக் குமார், கேட்டபோது, தானாகவே முன் வந்து தன் மீதான குற்றத்தை தவறென்று நிரூபிக்க விரும்பியதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

ஸ்டாலின் கூறுகையில், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் சேர்த்த புகார் குறித்தான விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. என் மேல்தொடரப்பட்ட வழக்கு, முதன்மை நீதிபதி விசாரணை ஆகியவை குறித்து பத்திரிக்கைகள் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.

முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து மேல்முறையீடு எதுவும் செய்யப் போவதில்லை. என் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைக்களையும் வகையிலும், தன்னிடம் உள்ள சொத்துக்கள் குறித்து முறையாக காண்பிக்கும் வகையிலும் தனக்கு கிடைத்த வாய்ப்புதான் இது என்றார்.

இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கோரிய மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 16 ம் தேதி வரை சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ். அசோக் குமார் நிறுத்தி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சென்பக மூர்த்தி தனது மனுவில், ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் கட்சி நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டுவந்தார். அதற்காக அவர் பெற்ற தொகை மாதமொன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் மட்டுமே.

ஆனால், தற்போது அவர் வேளச்சேரியில் ஒரு பெரிய வீடும், நுங்கம்பாக்கத்தில் இரண்டு ஸ்நோ பவுலிங் சென்டர்களும் வைத்துள்ளதோடு தன் மகன் உதயநிதிஸ்டாலின் பெயரில் தொழில் நடத்தி வருகிறார். இவற்றின் மொத்த முதலீடு எட்டு கோடி ரூபாயாகும்.

அரசு ஊழியர் என்ற வகையில் அவர் தனது சொத்துக்களை பற்றியும் அவற்றை வாங்குவதற்கு பயன்படுத்திய வருவாய் ஆதாரங்களையும் தர வேண்டும்.தனது இந்த குற்றச்சாட்டுகளின மீது மாநில லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க உத்தர விடவேண்டும் என்று கோரியிருந்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+