11 தொகுதிகள் கேட்கத் தயாராகிறது வ.கம்யூ.
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் 11 தொகுதிக்கு மேல் கேட்போம் என்று வ. கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நல்லகண்ணுகூறினார்.
வ.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் சென்னை பாலன் இல்லத்தில் புதன்கிழமை மாலைதொடங்கியது.
கூட்டம் முடிந்ததும் கட்சி செயலாளர் நல்லகண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வ. கம்யூனிஸ்ட் கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். தற்போது தமிழக அரசியல்நிலவரம் குறித்து நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
நாங்கள் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்து வருகிறோம். தமிழ் மாநில காங்கிரஸ் தங்களது முடிவைத்தெரிவித்த பின்புதான் நாங்கள் தொகுதி உடன்பாடு குறித்துப் பேசுவோம்.
இப்போது தமிழகத்தில் எங்கள் கட்சிக்கு 8 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் பெண்ணாடம்,ஆலங்குடி, ஸ்ரீவில்லிலிபுத்தூர் ஆகிய 3 தொகுதிகளில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைஇழந்தோம். ஆகவே வரும் சட்டசபைத் தேர்தலில் 11 தொகுதிகள் கேட்போம் என்றார் நல்லகண்ணு.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications