For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக அரங்கில் பலமான நாடு இந்தியா.. வாஜ்பாய்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

Vajpayee in Coimbatore visitபல்வேறு இயற்கை சீரழிவுகளையும் சவால்களையும் சந்தித்தாலும், உலக அரங்கில் இந்தியாவை பலமுள்ள நாடாகஇந்தியா உருவாகியுள்ளது என பிரதமர் வாஜ்பாய் கோவையில் பேசினார்.

கோவை சிதம்பரனார் பூங்காவில் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய்கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக ப.ஜ. ,தலைவர் கிருபாநிதி, பொதுச் செயலர் இல.கணேசன், எச்.ராஜா,மத்திய அமைச்சர்கள் பாலு, வெங்கய்யா நாயுடு., கண்ணப்பன்., கூட்டணிக் கட்சித் தலைரவர் வைகோ,திருநாவுக்கரசு., உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் பேசியாதவது:

கோவையில் உற்பத்தியாகும் சுதேசிப் பொருள்களால், சர்வதேசச் சந்தையில் முக்கிய இடத்தை தமிழகம்பெற்றுள்ளது. கோவை பொருட்கள் உற்பத்தியில் மட்டுமல்லாமல், கல்வியிலும் முன்னேறியுள்ளது. பாரதநாட்டினை வேறு நாடுகளுக்கும் கீழாக விட்டுக் கொடுக்கமுடியாது.

அணு ஆயுதச் சோதனை செய்தபோது, அணு குண்டுகளை தயாரித்த நாடுகள் எல்லாம், அதனை எதிர்த்தன. அணுகுண்டு சோதனையை முடித்த பிறகு எல்லா நாடுகளும் நம்மை ஆதரிக்காமல் விட்டு விடவில்லை. எத்தனைசோதனைகள் வந்தாலும் நாம் அவற்றை எதிர்கொண்டு வருகிறோம்.

கார்கில் பிரச்னையானலும் சரி, பாகிஸ்தானின் பிரச்னையானலும் சரி, ஜம்மு காஷ்மீரில் நாம் எடுக்கும்முடிவானாலும் நாம் அவற்றை சர்வதேச நாடுகளின் பார்வைக்கு வைக்கிறோம்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவை எப்படி தீவிரவாதத்தின் பார்வைக்குள்ளானது என்பது எனக்குத்தெரியவில்லை. அப்போது அத்வானி கோவை வந்தபோது அவரைக் குறிவைக்க வைக்கப்பட்ட குண்டுகள் 60பேரைக் கொன்றது. விமானம் தமதமானதால், அவர் தப்பினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் கோவை வந்துள்ளேன். இந்தக் கோவையில் இப்போது எனக்கு நினைவு வருவது1974ம் ஆண்டு சாஸ்திரி மைதனாத்தில் நான் பேசினேன். அப்போது தீவிரவாதத்தை எனது உயிரைக்கொடுத்தாவது தடுப்பேன் எனக் கூறியது நினைவுக்கு வருகிறது.

எனது அரசு சிறுபான்மையினருக்கு எதிரான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது. அவர்களைப் பாரபட்சமாகநடத்த மாட்டோம். ஆனால் தீவிரதாத்திற்கு துணைபோகும்., ஆயுதம் ஏந்துபவர்கள் எல்லாம் சிறுபான்மைஇனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் சமுதாயவிரோதிகள்.

கடந்த 3 ஆண்டுகால ஆட்சி காலத்தில் தமிழகத்துடன் மத்திய அரசு நல்ல உறவைக் கொண்டுள்ளது. இதனால்மாநில அரசுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து நன்மையே கிடைத்து வருகிறது. இது வரும் சட்டமன்றத் தேர்தலிலும்தொடர வேண்டும். அதற்கு மக்களாகிய நீங்கள் உதவ வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் நாங்கள் தூய்மையான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பின்பற்றியுள்ளோம்.எங்கள் ஆட்சி காலத்தில் ஊழல் இல்லை., அதற்கான குற்றச்சாட்டுகளும் இல்லை.

கோவை நகரில் ஜவுளித் தொழில் நசிந்து வருவதாக தொழிலதிபர்கள் என்னிடம் தெரிவித்தனர். இதனைக் கலைந்துசீர்திருத்தம் மேற்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்வோம். ஜவுளித் தொழில் வளர்ச்சிக்காக ரூ. 25ஆயிரம் கோடி ரூபாய் இந்த அரசு அறிவித்தது. அதனை முறையாகப் பயன்படுத்த தொழில் அதிபர்கள் முன் வரவேண்டும் என்றார் பிரதமர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X