பி.பி.சி. நிருபர் வெளியேற ஜிம்பாப்வே உத்தரவு
ஹராரே:
பி.பி.சி. நிருபரை நாட்டை வெளியேறுமாறு ஜிம்பாப்வே அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அவருடைய வீட்டை தாக்க முயற்சி நடந்துள்ளது.
ஜோசப் வின்டர் என்ற பி.பி.சி. நிருபரின் வீட்டை சூழ்ந்து கொண்ட கும்பல் ஒன்று வெளியில் நிற்கும் காரில் ஏறி உடனடியாக வெளியேறுமாறு கூறியது.தன்னுடைய வக்கீல் மற்றும் பிரிட்டன் தூதரகத்தை வின்டர் தொடர்பு கொண்டதை அடுத்து அங்கு விரைந்த பத்திரிகையாளர்களை கண்டதும் அக்கும்பல்அங்கிருந்து தப்பியோடியது.
வின்டரையும் அவருடைய மனைவி மற்றும் மகளையும் உடனடியாக பிரிட்டன் தூதரக அதிகாரிகள் பிரிட்டன் தூதரகத்திற்கு அழைத்து சென்று விட்டனர்.இதனிடையே, வின்டரின் வக்கீலான பியாட்ரிஸ் டேட்வா, வின்டரை நாட்டை விட்டு வெளியேறக் கோரும் ஆணையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக தெரிவித்தார்.
வின்டருக்கு அளிக்கப்பட்ட விசா முறையின்றி வழங்கப்பட்டுள்ளது. விசா அளிக்கும் அதிகாரமற்ற ஒரு அதிகாரி அளித்த முறையற்ற அந்த விசாசெல்லத்தக்கதல்ல. எனவே, வின்டர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது, என அரசு தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டியில் ஜிம்பாப்வே தகவல் தொடர்பு துறை மந்திரி ஜோனதன் மேயோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications