இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் .. முதல்வர்
சென்னை:
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குப்பின் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் ஆற்றிய உரையில் இதனை அறிவித்த அவர் தொடர்ந்து கட்சிப் பணி ஆற்ற விரும்புவதாகதெரிவித்தார்.
தனது உரையில் கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வராக விரும்பவில்லை. எனினும்,கடந்த ஐந்தாண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களும் மக்களுக்கு பலனளிக்க வேண்டும். அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆண்டுகள் மட்டுமேமுதல்வராக பணியாற்றி விட்டு, தொடர்ந்து கட்சிப் பணியை மேற்கொள்வேன்.
இந்த முடிவு கட்சியினரை புண் படுத்துவதாக எடுத்துக் கொள்ளாமல், என்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாக கருத வேண்டும்.
கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய மத்திய அமைச்சர் முரசொலி மாறன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தனது பங்களிப்பை ஆற்றியது மிகவும்சந்தோஷமானது.
ஏனெனில், சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த அவரின் நிலையை கண்டு கண்ணீர் வடித்திருந்தேன். அவர் தற்போதுகுணமடைந்து தனது பணிகளை ஆற்றுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது, என தெரிவித்தார்.
கருணாநிதி உரையாற்றத் தொடங்கும் போது கருணாநிதி வாழ்க எனக் கோஷமிட்ட கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிடுவதில்லைஎன்ற தனது முடிவை அவர் கூறியதும், அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கூச்சலிட்டனர்.
அவர் தனது முடிவை கைவிட வேண்டும் எனக் கோரினர். கட்சியின் மூத்த தலைவர்களான பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோருக்கேகருணாநிதியின் இந்த முடிவு ஆச்சரியமளிப்பதாக இருந்தது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications