விஷம் கலந்த உணவு .. 50 மாணவிகள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மீனாட்சி கல்லூரியில் படித்து வந்த 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் விஷம் கலந்து உணவை சாப்பிட்டது தொடர்பாக மயக்கமடைந்து ராஜாஜிஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துப் போலீஸார் தெரிவிக்கையில், மீனாட்சி கல்லூரியில் உள்ள மாணவிகள் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை தோசையும், சாம்பாரும்கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்ட மாணவிகள் சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கமடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள்தற்போது குணமடைந்து வருகிறார்கள்.
கல்லூரி மாணவிகளுக்கு வழங்கிய சாம்பாரில் பல்லி விழுந்தது காரணமாக மாணவிகள் மயக்கமடைந்தனர் என்று தெரிய வந்துள்ளது. இது குறித்துவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications