ஆப்கான் அகதி முகாம் பாகிஸ்தானில் அமையுமா?
பெஷாவர்:
ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான முகாமை பாகிஸ்தானில் அமைப்பது குறித்து விரைவில் முடிவு காணப்படும் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. அதிகாரி,கென்ஸோ ஒஸிமா தெரிவித்தார்.
பெஷாவரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ஜலோஸி என்னுமிடத்தில் உள்ள ஆப்கன் அகதிகளின் நிலையை பார்வையிட்டபின் நிருபர்களிடம் பேசிய ஒஸிமா,ஆப்கனில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் உள்நாட்டுப்போர் மற்றும் தற்போது வறட்சியினால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களின் நிலைமைபரிதாபத்திற்குரியது. அவர்களை காப்பதற்காக பாகிஸ்தானில் மற்றொரு அகதி முகாம் அமைப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் அரசு சிறந்த முறையில் ஆப்கன் அகதிகள் முகாமை பராமரித்து வருகிறது. மேலும் ஒரு முகாம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதுபற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேவைப்பட்டால், பாகிஸ்தான் ஆலோசனைப்படி ஆப்கானிஸ்தானிற்குள்ளே அகதிகள் முகாம் அமைப்பதுபற்றி பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் ஏற்கனவே உள்ள அகதிமுகாம்களை நிர்வகிக்க சர்வதேச நிதியுதவி குறைவாக அளிக்கப்படுவதாலும், மேற்கொண்டு அகதிகள்வந்தால் பராமரிப்பது சிரமம் என கூறி ஐ.நா.வின் மற்றொரு முகாம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை பாகிஸ்தான் நிராகரித்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications