ஈராக் மீது அமெரிக்கா குண்டு மழை
பாக்தாத்:
அமெரிக்காவின் எதிரி நாடான ஈராக் மீது விமானத் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஜூனியர்உத்தரவிட்டார்.
இதையடுத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விமானங்கள் ஈராக் மீது குண்டு மழை பொழிந்ததில் 2 பேர்கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் பெண்.
இந்தத் தாக்குதலில் 5 க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ ரேடார் கண்காணிப்பு மையங்களும், விமான தொடர்புஅமைப்புக்களும் அழிந்தன.
1991 ம் ஆண்டு குவைத்தின் சில பகுதிகளை ஈராக் கைப்பற்றியது. அந்தப் பகுதிகளிலிருந்து ஈராக்கைவெளியேற்றுவதற்காக அப்போதைய அதிபரான ஜார்ஜ் புஷ் விமானத் தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டார்.இதற்கு இங்கிலாந்தும் உதவி செய்தது.
இதற்கிடையே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ரோந்துப் படைகள் ஈராக்கில் ரோந்துப் பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈராக்கின் நவீன ரேடார் கண்காணிப்பு மையம், இது வெளிநாட்டு விமானங்களுக்குதடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி இங்கு வந்தால் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று கூறியது.
இதையடுத்து அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அதிபர் ஜார்ஜ் புஷ் அமெரிக்கவிமானங்களை மிரட்டி வரும் ஈராக் ரேடார் மையங்களை தாக்கி அழிக்கும் படி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 50 க்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் இங்கிலாந்து விமானங்கள்பாக்தாத் அருகில் இருந்த பாதுகாப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தின.
சுமார் இரண்டரை மணிநேரம் இந்தத் தாக்குதல் நடந்தது. ஈராக்கின் அதி நவீன ரேடார் கண்காணிப்பு மையம்மற்றும் தரையில் இருந்து வான்வெளியை கண்காணிக்கும் 5 அமைப்புக்களும் அழிக்கப்பட்டன. இந்தத்தாக்குதலில் வீட்டிலிருந்து 2 பேர் கொல்லப்பட்டனர். 4 குழந்தைகள் உள்பட 11 க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.
அமெரிக்க படைகள் நம்மீது குண்டு மழை பொழிகின்றன. அதனால் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள் என்று ஈராக்நாட்டின் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் எச்சரிக்கை செய்தபடி அபாய ஒலியை எழுப்பினர்.
சீனா கண்டனம்:
ஈராக் மீது நடந்த தாக்குதலுக்கு ரஷ்யா, சீனா உள்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தத்தாக்குதல் பற்றி அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகான் தெரிவிக்கையில், 1998 ம் ஆண்டு டிசம்பர்மாதம் ஈராக் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் டெஸர்ட் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்தும்பெரிய தாக்குதல் இது என்று கூறியுள்ளது.
கவுன்சில் கூட்டம்:
ஈராக் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதும், ஈராக் அதிபர் சதாம் உசேன்ஈராக்கின் ராணுவம் மற்றும் அரசியல் பிரதிநிதிகளைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications