ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா
ராமநாதபுரம்:
புகழ்பெற்ற ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத பாகுபாடின்றி அனைத்து மதத்தினரும் வந்து கலந்து கொள்ளும் சிறப்பு வாய்ந்தது ஏர்வாடி தர்ஹா. இங்கு நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில்லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
1250 ஆண்டுகள் பழமை வாயந்த ஏர்வாடி தர்ஹாவில், சவூதி அரேபியாவின், மதீனா நகரிலிருந்து இஸ்லாம் மதத்தை பரப்புவதற்காக இந்தியா வந்த குத்புசுல்தான் செய்யது இப்ராஹிம் சமாதி உள்ளது.
இங்கு அடக்கமாகியுள்ள மகானிடம் முறையிட்டால் பிணி, குறைகள் நீங்கும் என மக்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே மக்கள் இங்கு அதிகஅளவில் வருகின்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் உரூஸ் எனப்படும் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்ஹாவின் நிர்வாகிகள் இருக்கும் தைக்கா பகுதியில்இருந்து 2 மைல் தூரம் பயணம் செய்து தர்ஹாவை அடையும்.
சந்தனக்கூடில் கொண்டுவரப்பட்ட சந்தனமானது தர்ஹாவில் அடக்கமாகியுள்ள மகானின் சமாதியில் பூசப்படும்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மணி பாரதி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள்கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications