இந்த கல்யாணத்துக்கு நீங்களும் வாங்க!
புவனேஸ்வர்:
நிச்சயதார்த்த வைபவத்தில் மோதிரங்கள் மாற்றிக் கொள்ளப்படுவது வழக்கம் தான்.இங்கேயும் அது நடந்தது.
கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்க்க புரோகிதரை அழைப்பது வழக்கம் தாண். அதுவும்இங்கே நடந்தது.
ஆனால், ஒரே ஒரு வித்தியாசம். குரங்குகள் தான் மாப்பிள்ளையும் பெண்ணும்.
வடக்கு ஒரிசாவில் புவனேஸ்வரிலிருந்து 96 கிலோமீட்டர் தொவைவில்அமைந்திருக்கும் பதார்க் மாவட்டம், சஹாதா என்ற கிராமத்தில் வசித்து வருபவர்சின்நாமணி தாஸ் என்ற விவசாயி.
இவர் தனது செல்லப் பிராணியான பெண் குரங்குக்கு திருமணம் செய்ய திட்டமிட்டார்.அதன் படி நடந்த நிச்சயதார்த்தத்தில்தான் குரங்குகள் மோதிரம் மாற்றிக் கொண்டன.
இந்த திருமணம் பற்றி தாஸ் கூறுகையில், என் செல்லப் பிராணியான இந்த பெண்குரங்கு என் மகளை போன்றது. இவளுக்கு அருகில் உள்ள கிராமத்தில் பள்ளி ஒன்றில்பியூனாக பணி புரிபவர் வீட்டில் இருக்கும் ஆண் குரங்கை மணம் முடித்து வைக்கப்போகிறேன்.
சென்ற வாரம் மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு நிச்சயதார்த்த வைபவத்தில் மோதிரம்அணிவித்தது.
இந்த திருமணம் குரங்குகளில் கடவுளாக போற்றப்படும் அனுமார் கோயிலில் இந்துமுறைப்படி நடக்கவிருக்கிறது. பதாம்பூர் கிராம மக்கள் அனைவரும் திருணத்திற்குஅழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்காக 1,000 பத்திரிக்கைகளைஅச்சடிக்கப்பட்டுள்ளது.
சிறு வயது முதலே நான் இவளை என் மகள் போல் வளர்த்து வருகிறேன். நாம் எப்படிநம் குழந்தைகளுக்கு திருமணம் செய்வோமோ அதே போல் நான் என் இந்தஇவளுக்கும் திருமணம் செய்து வைக்கிறேன். இதுவும் என் குழந்தை போலத்தான்.இதுவும் என் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர்தான்
ஆண் குரங்கு மாப்பிள்ளை போல் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்படும். பெண் குரங்கும் மணப் பெண் போல் அலங்கரிக்கப்பட்டும். பண்டிதர்ஒருவர் வேத முறைப்படி திருமணத்தை நடத்தி வைப்பார்.
திருமணத்திற்கு பிறகு 1,000 பேருக்கு விருந்து அளிக்கப்படும். மார்வாரி இனத்தைச்சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்க முன்வந்துள்ளனர்.
பல பத்திரிக்கையாளர்கள், மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறைஅதிகாரிகளும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அருகிலுள்ளகிராமங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன் எனதாஸ் கூறினார்.
உள்ளூர் முறைப்படி மணப்பெண்ணின் தந்தை மாப்பிளையின் தந்தைக்கு ரூ.1,000கொடுத்தார். இது மாப்பிள்ளையை மேள தாளத்துடன், பட்டாசு வெடிக்கமாப்பிள்ளையை திருமணம் நடக்கும் கோவிலுக்கு அழைத்து வரப்படும ஊர்வலசெலவிற்காக கொடுக்கப்படும் பணமாகும்.
இது போல் செல்ல பிராணிகளை குழந்தைகளாக நினைத்து வைபவங்கள் நடத்துவதுபுவனேஸ்வரில் புதிதல்ல. சென்ற வாரம் புகழ் பெற்று புரி நகரில் காளை மாடு ஒன்றுக்குபிராமண இளைஞர்களுக்கு நடத்தப்படுவது போல் பூணூ
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications