For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் குறித்து தே.ஜ.கூட்டணி ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

வரும் சட்டசபைத் தேர்தல் குறித்து ஞாயிற்றுக்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூடிமுடிவு எடுக்கிறார்கள்.

இதுகுறித்து கோவை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி, நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியதாவது:

வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் வீராசாமிதலைமையில் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம்நடக்கிறது. இக் கூட்டம் முடிந்ததும், எந்தக் கட்சி எத்தனை இடம் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.மேலும்எங்கள் கூட்டணியில் எவ்விதக் குழப்பம் இல்லை.

எங்கள் கூட்டணிக்கு வேறு சில கட்சிகளும் வர வாய்ப்புள்ளது. தேசி ய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பா.ஜ.கவைவிலக்கினால்,மட்டுமே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு இடம் பெறும் என திருமாவளவன் நிபந்தனைவிதித்துள்ளார். அகில இந்திய அளவில் தி.மு.க.,தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது. எனவே, விடுதலைச்சிறுத்தைகளுக்காக பா.ஜ.,வை விலக்கி வைக்க முடியாது.

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலைச் சந்திக்கும். தமிழ்நாட்டில் இன்றையசூழ்நிலையில் 3வது அணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தமிழ் மாநில காங்கிரசுடன் அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை. இக்கட்சியில் மட்டுமல்லஎக்கட்சியானாலும், இரு வேறு கருத்துக்கள் நிலவ வாயப்பு உண்டு. அப்படி இருந்தாலும், அந்தக் கருத்துப்பிளவுக்குள் நான் நுழைய விரும்பவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் சலசலப்பு இருப்பது பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. மேலும், அதுபற்றி நான் அவர்களை புண்படுத்தவும் தயாரில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் செயல் திட்டத்தில் இல்லாதராமர்கோயில் கட்டுவது பற்றி விஸ்வ இந்து பரிஷத் கூறி வருகிறது. பாரதிய ஜனதா இந்த முடிவுக்குஆதரவளித்தால், தி.மு.க அதனை எதிர்க்கும்.

வீரப்பனைத் தேடும் வேட்டை:

காட்டிற்குள் வீரப்பனைத் தேடும் பணி யில் எவ்விதத் தொய்வும் ஏற்படாமல், தொடர்ந்து நடக்கிறது. வீரப்பனைத்தப்புவிக்க தமிழக அரசும், அதிரடிப்படையும் முயற்சிப்பதாக கர்நாடக எஸ்.பி கூறியுள்ளதாகத் தகவல்கிடைத்துள்ளது. அவ்வாறு தவறான கருத்தை அவர் கூறியிருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு,கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதும்.

வீரப்பன் தொடர்பாக துக்ளக் சோ கூறியிருக்கும் கருத்துக்கள், அவருக்கும் வீரப்பனுக்கும் இடையே உள்ளதொடர்பால் எழுதியுள்ளார். இலங்கைப் பிரச்னையில் தீர்வு காண, நார்வே நாட்டுத் தூதுவர் எடுக்கும் முயற்சிகள்குறித்து இரு தரப்பினரும் தங்களது தெளிவான முடிவினை அறிவிக்க வேண்டும். அப்போது தான் அங்குள்ளதமிழர்கள் நிம்மதியாகவும், கவலையின்றியும் வாழ முடியும்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடுவாரா மாட்டாரா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. குற்றம் செய்தவருக்குச் சட்டத்தில் என்ன இடம் இருக்கிறதோ, அதற்கு ஒப்ப தண்டனை கிடைக்கும்.

தேர்தலுக்குப் பின், மத்திய ஆட்சியில் செய்து கொண்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் பா.ம.கஎம்.பிக்கள் மூலம் ஜெயலலிதா பிரச்னையை ஏற்படுத்த நினைத்தால் அது அவருக்குத் தோல்வியைத் தான்அளிக்கும்.

தென்னை விவசாயிகள் கள்ளுக் கடைகளைத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடபாகஅத்ைதுக்கட்சிகள் கூடித்தான் நடவடிக்கை எடுக்க முடியும். விவசாயக் கூட்டுறவு வங்கியில், ரூ. 120 கோடிதி.மு.க., வினருக்கு மட்டுமே கடன் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகாருக்கு அமைச்சர் நேரு விளக்கம்அளித்துள்ளார் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X