அப்பா கருணாநிதி- மகன் அழகிரி மோதல் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி அவருடைய மகன் மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளர்களான 12 பேரை கட்சியிலிருந்து சஸ்பென்ட்செய்சதுள்ளார்.

மு.க. அழகிரி தான் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடப் போவதாக ஞாயிற்றுக்கிழமைஅறிவித்திருந்தார். இப்போது அழகிரியின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டிருப்பது மிகவும்முக்கியத்துவம் பெறுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது ஆதரவாளர்களை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டது கருணாநிதிதான் என்றாலும்,இதற்கு காரணம் சட்டசபை சபாநாயகர் பழனிவேல் ராஜனும், கல்வி அமைச்சருமானஅன்பழகனும்தான் என்ற அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இது கட்சியை அழிக்கும்சதிதிட்டம் எனவும் கூறியுள்ளார்.

தனது ஆதரவாளர்கள் சஸ்பென்ட்செய்யப்பட்டது குறித்து அழகிரி நிருபர்களிடம்கூறுகையில், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள் எனபுரியவில்லை.

நான் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவதாக விழா ஒன்றில் அறிவித்தேன். அந்தவிழாவில் பங்கேற்றதற்காக எனது ஆதரவாளர் ஒருவரை பழனிவேல் ராஜன்மிரட்டியுள்ளார்.

மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ராமச்சந்திரன் ஏன் சஸ்பென்ட்செய்யப்பட்டார், என்னை கட்சி தலைமையுடன் சமரசமாக போகுமாறு கூறிய தி.மு.க.வின்மூத்த தலைவர் தாவூத் ஆகியோர் ஏன் சஸ்பென்ட் செய்யப்பட்டனர் என்பதும்புரியவில்லை.

எனது ஆதரவாளர்கள்அழகிரி எழுச்சி பேரவை என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.எனது அடுத்த முடிவை எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின்னரே எடுப்பேன்என்றார்.

சில மாதங்களுக்கு முன் அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கருணாநிதி அறிவித்தார்.பின்னர் தந்தையும் மகனும் சமரசமாயினர். ஆனால், அழகிரி சஸ்பெண்ட் என்ற செய்திவந்தவுடனேயே மதுரையில் வன்முறை வெடித்தது. அழகிரி ஆதரவாளர்களால் 8 அரசுப்பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. அழகிரியுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டாம் என கட்சி தலைமை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எரிக்கப்பட்ட பஸ்கள் தொடர்பான போலீஸ் வழக்கும் தூங்குகிறது என்பதுமகுறிப்பிடத்தக்கது.

இப்போது அழகிரியின் ஆதரவாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதையடுத்து அங்குஎந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க மதுரையில் திங்கள்கிழமைஇரவு முதலே காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் மீண்டும் பஸ் எரிப்பு போன்ற ஜனநாயகப் போராட்டத்தில் அழகிரிஆதரவாளர்கள் இறங்கினால், மக்களும் ஜனநாயகப் பாதையில் ஓட்டை மாற்றிப்போடுவார்கள் என்பதால் அது போன்ற அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்கபோலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அழகிரியின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அது தென் மாவட்டங்களில்தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என அரசியில் நோக்கர்கள் கருதுகின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+