இங்கிலாந்துக்குப் புலிகள் கண்டனம்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச தீவிரவாத இயக்கமாக அறிவித்து அதற்கு இங்கிலாந்து அரசு விதித்துள்ள தடைக்கு புலிகள் கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
மேலும் நார்வேயின் ஓஸ்லோ அமைதி முயற்சியைத் தொடருவோம் என்று கூறியுள்ளனர்.
லண்டனில், புலிகள் இயக்கம் சர்வதேச இயக்கம் என்ற அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் புலிகள் செய்தித் தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கம் சார்பில்கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் அமைதி ஏற்படுத்த முயற்சி எடுத்து வரும் நார்வே நாட்டுக்கு, விடுதலைப்புலிகள் ஒத்துழைப்பு கொடுக்கும். இங்கிலாந்து அறிவித்தது போல்நாங்கள் சர்வதேச தீவிரவாத இயக்கத்தினர் அல்ல.
இங்கிலாந்து விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்துள்ளது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். மேலும் இங்கிலாந்தின் இந்த அறிவிப்பால்எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி நார்வேயின் அமைதி முயற்சியில் பிரச்சனை ஏற்படும்.
மேலும் இங்கிலாந்து இவ்வாறு கூறியிருப்பது இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பாதிக்கும். புலிகளுடன் தொடர்பு இருக்கிறது என்றுகாரணம் காட்டி இலங்கை அரசால் துன்புறுத்தப்பட்டு வரும் தமிழர்கள் மிகவும் பாதிப்படைவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இங்கிலாந்தின் புதிய தீவிரவாதிகள் தடை சட்டம் 2000 ன் படி 21 தீவிரவாதிகள் இயக்கங்களை சர்வதேச தீவிரவாதிகள் இயக்கம் எனஅறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் புலிகளின் பெயரும் இருப்பதால் புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் இந்தத் தீர்மானம் சர்வதேச தீவிரவாத செயல்களை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வர அந்நாடு முயற்சிக்கிறது என்பதையேகாட்டுகிறது.
புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்துறை செயலாளர் ஜாக் ஸ்ட்ரூ புதன்கிழமை அறிவித்தார். மேலும்விடுதலைப்புலிகள் இயக்கத்தால் இங்கிலாந்து உள்பட வேறு சில நாடுகளுக்கும் பயமுறுத்தல்கள் இருப்பதால் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடைவிதிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண இரு தரப்பினரும் இன்னும் சரியான முடிவுக்கு வரவில்லை.
இது தவிர, இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருந்தாலும் இலங்கையில் அமைதி ஏற்படுத்த நார்வே எடுத்து வரும் முயற்சிக்குஇங்கிலாந்து ஆதரவளிக்கும். மேலும் இலங்கை அரசும், விடுதலைப்புலிகள் இயக்கமும் அமைதிப் பேச்சுவார்த்தையை எவ்வளவு விரைவில் முடியுமோஅவ்வளவு விரைவில் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, புலிகள் கூறுகையில், எங்கள் இயக்கத்துக்கு இங்கிலாந்து தடை விதித்திருப்பது, இலங்கை அரசை ஊக்குவது போன்றதாகும். மேலும்அவர்கள் இதனால் சமரச பேச்சுவார்த்தைக்கு வர காலம் கடத்துவார்கள். இதனால் இறுதியில் இலங்கையில் மேலும், மேலும் தீவிரவாதம்தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications