இங்கிலாந்தில் புலிகளுக்குத் தடை: இந்தியா தான் காரணம்
கொழும்பு:
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில், விடுதலைப் புலிகளின் பெயரையும் இங்கிலாந்து அறிவிப்பதற்குக் காரணமாகஇருந்த இந்தியாவுக்கு, இலங்கை நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்லட்சுமண் கதிர்காமர் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை விடுதலைப்புலிகள் உள்பட 21 தீவிரவாதிகள் இயக்கத்தை சர்வதேச தீவிரவாத இயக்கம்என்று அறிவித்தது இங்கிலாந்து. அத்துடன் இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்துக்குத் தடையும் விதித்தது.
இதையடுத்து, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் அளித்த பேட்டியில்,
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங் பலமுறை, இங்கிலாந்திடம் வலியுறுத்தினார்.
இதனால், இங்கிலாந்து புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிப்பதற்கு இந்தியாவும் ஒரு காரணம். அதனால்இந்தியாவுக்கு, இலங்கையும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
இங்கிலாந்து, புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்துள்ளதால் அவர்களுக்கு இலங்கை அரசு எப்போதும் தலைவணங்கும். நான் லண்டன் சென்று இங்கிலாந்து அரசுக்கு நன்றி கூறப் போவதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள்வந்துள்ளன. அது வெறும் வதந்தி.
புலிகள் விஷயத்தில், இங்கிலாந்து நடுநிலையான, நியாயமான முடிவை எடுத்துள்ளது.
இங்கிலாந்து புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்துள்ளது, இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரியவெற்றியாகும் என்று பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இருப்பினும், இலங்கையில் வாழும் சிங்களர்களும், தமிழர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுமிகப்பெரிய வெற்றி என்று யாரும் கருதி விடக் கூடாது. இங்கிலாந்து அரசு, இலங்கையில் வாழும் தமிழர்களுக்குஎதிராகச் செயல்பட வேண்டும் என்று இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. தமிழர்கள் யாரும் கலவரமடையத்தேவையில்லை.
மேலும், நார்வே தூதுக் குழுவினரின் ஒத்துழைப்பின் பேரில், இலங்கையில் அமைதி ஏற்படவிடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அரசு அனைத்து முயற்சிகளையும்மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications