குஜராத் மீட்புப்பணி: தலித்துக்கள் மீது பாரபட்சமா?
சென்னை:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணியில் தலித்களும், சிறுபான்மையினரும் பாரபட்சமாய் நடத்தப்படுவதாககூறப்படுவதை காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மறுத்துள்ளார்.
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜாராத்திற்கு சென்று மீட்பு பொருள்களை வழங்கி விட்டு திரும்பியுள்ளார். அவர்நிருபர்களிடம் கூறுகையில், நான் அங்கு பல பகுதிகளுக்கும் சென்றேன். ஆனால் மீட்பு பணிகளில் தலித்களும், சிறுபான்மையினரும் பாரபட்சமாகநடத்தப்படுவதை பார்க்கவில்லை.
சோனியா காந்தி சிறுபான்மையினர் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கூறியுள்ளது, அரசியில் சம்பந்தப்பட்டது. அது குறித்து நான் எதுவும் கூறவிரும்பவில்லை.
தலிபான் அரசு 2,000 ஆண்டு பழமையான புத்தர் சிலையை இடிக்க முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் பல ஆயிரகணக்கான ஆண்டுகளாக இறைவனின் உருவ வழிபாடு நடந்து வருகிறது. நமக்கு அருகில் இருக்கும்நாடுகளில் இது போன்ற நடவடிக்கை எடுப்பது குறித்து இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
காஞ்டி சங்கர மடம் குஜராத்தில் பள்ளி ஒன்றும் அனாதை ஆசிரமும் கட்ட உள்ளது. இதற்கான செலவில் காஞ்சி மடம் 50 சதவிகிதம் செலவை ஏற்றுக்கொள்ளும். மீதமுள்ள செலவை குஜராத் அரசு ஏற்றுக் கொள்ளும்.
இவ்வாறு சங்கராச்சாரியார் கூறினார்.
யு.என்.ஐ.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications