45 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.க.
சென்னை:
பாரதீய ஜனதா கட்சி 45 தொகுதிகள் கேட்கும் என அதன் சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க.தேர்தல் குழு உறுப்பினருமான சி.வேலாயுதன்தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசிய போது இதனை தெரிவித்த அவர்,
கன்னியாக்குமரி, திருச்சி, கோவை, நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள 62 தொகுதிகளில் பா.ஜ.க.விற்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
இத்தொகுதிகளில் 45 ஐ தே.ஜ.க.வின் தமிழக தலைமையான தி.மு.க.விடம், பா.ஜ.க. கேட்கும். கூட்டணி குறித்த குழப்பங்கள் தீர்ந்தபின், தொகுதிஉடன்பாடு குறித்து விவாதிக்கப்படும்.
தமிழகத்தில், தற்போதைய சூழ்நிலையில், தி.மு.க.தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். 3வது அணி உருவாவது அதனை மேலும்உறுதிப்படுத்தும்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் ஜெயலலிதா போட்டியிடாமல் இருப்பது நல்லது.
ராமர் கோவில் பிரச்சனையில், நீதிமன்றத்தின் தீர்ப்பையோ, இரு தரப்பினரும் சேர்ந்து எடுக்கும் முடிவையோ, பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளும்.
திருச்சி எம்.பி.தொகுதி பா.ஜ.க போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி, அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிடக்கூடும் என்ற தகவல்கள் பற்றி தெரியாது என தெரிவித்தார்.
பாஜ.க.வின் தமிழக தேர்தல் குழுவில் வேலாயுதம் மற்றும் , மத்திய அமைச்சரான நாகர்கோவில் தொகுதி எம்.பி, பொன்.ராதாகிருஷ்ணனும்,கோவை தொகுதி எம்.பி.ராதாகிருஷ்ணனும் இடம் பெற்றுள்ளனர்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications