இந்தியாவில் சாலை விபத்துகளில் 68,000 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சென்ற ஆண்டில் மட்டும் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 68,000 பேர்இறந்துள்ளனர். இவர்களில் 3,000 பேர் டெல்லியில் நடந்த விபத்துகளில்இறந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பலர்முடமாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

டெல்லியில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பால்நடத்தப்பட்ட விபத்துகள் -காரணமும், தவிர்க்கும் வழிகளும் என்ற கருத்தரங்கில்கலந்து கொண்டு பேசிய டெல்லியின் போக்குவரத்துத் துறை கூடுதல் கமிஷனர்மாக்ஸ்வெல் ஃபெரைரா கூறியதாவது:

டெல்லியில் நடந்த விபத்துகள், வெறும் விபத்துக்கள் மட்டுமல்ல. அவை ஒருபாவமும் அறியாத பலர் கொல்லப்பட்ட சம்பவங்களாகும். இவை திகிலூட்டுபவை.

இந்த விபத்துகள் அனைத்தும் தவிர்க்கப்படக் கூடியவைதான். தவறு செய்தவர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகை இல்லாதது விபத்துகள் அதிகமானதுக்கானகாரணங்களில் ஒன்று.

தங்கள் கவனக் குறைவால் விபத்து நடக்கக் காரணமாக இருந்த பல ஓட்டுனர்களும்அபராதம் கட்டி விட்டு தப்பி விடுகிறார்கள்.

ஓட்டுனர்களுக்கு உரிமம் (லைசென்ஸ்) வழ்குவதிலும் குறைபாடு உள்ளது. லண்டனில்ஒரு ஓட்டுனரின் உரிமம் ரத்து செய்யப்பட்டால் அவருக்கு 2 ஆண்டுகளுக்கு மீண்டும்உரிமம் வழங்கப்பட மாட்டாது. அது போன்ற சட்டம் இங்கும் பின்பற்றப்படவேண்டும்.

ஆனால் இங்கு ஓட்டுனருக்கு ஒரு உரிமம் ரத்து செய்யப்பட்டால், அவர் மேலும் 6உரிமங்களை கையில் வைத்துக் கொண்டு. அதன் மூலம் அவர் மேலும் பலவிபத்துக்களுக்கு காரணமாகிறார். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

இந்த கருத்தரங்கில் பேசிய போக்குவரத்துத்துறை செயலாளர் அசோக் ஜெயின்கூறுகையில், ஒருவரே பல உரிமம் வைத்திருப்பதை தடுக்க அரசு புதிய முறைகளைகையாள இருக்கிறது.

இப்போது வழங்கப்படும் உரிம அட்டைகளில், அதை வைத்திருப்பவர் பெயர் மற்றும்பல விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அது போல் போலி அட்டையும் தயார் செய்யஇயலாத வகையில் அது தயாரிக்கப்பட இருக்கிறது

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட எல்லா மாநில அரசுகளும் உதவ வேண்டும்.போர்குவரத்துத் துறைக்கு எல்லா விதமான தொழில் நுட்ப வசதிகளையும்போக்குவர்தது அமைச்சகம் வழங்கும் என உறுதி அளித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+