சி.பி.எஸ்.சி தேர்வு தொடங்கியது: நாளை எஸ்.எஸ்.எல்.சி தேர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாடு முழுவதும் உள்ள 12ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகள் புதன்கிழமை தொடங்கின.

இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.சி 12 ம் வகுப்புத் தேர்வுகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுஎழுதுகிறார்கள்.

தேர்வு தொடங்குவதையடுத்து டெல்லியிலுள்ள சில சிபிஎஸ்சி பள்ளிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தங்கள் பள்ளிக்கு நல்ல முடிவுகளும், நல்ல மதிப்பெண்களும்கிடைக்க வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தார் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

இருப்பினும், டெல்லியிலுள்ள அபிவிவாக் மகாசங்க பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்கள் குழந்தைகளை பரிட்சை தொடங்குவதற்கு முன் பள்ளிநிர்வாகத்தார் கோவில்கள் மற்றும் வழிபாடு நடத்துவதற்காக வற்புறுத்துகின்றனர் என்று புகார் கூறியுள்ளனர்.

சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 7,93,344 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களில் 2,98,000 பேர் 12 ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். சிபிஎஸ்சி 12 ம் வகுப்புத் தேர்வுகள் புதன்கிழமை தொடங்கியுள்ளது. 4,95,442 பேர்10 ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்.

வளைகுடா நாடுகளில் உள்ள 68 பள்ளிகளைச் சேர்ந்த 10,000 பேரும் சிபிஎஸ்சி தேர்வுகள் எழுதுகிறார்கள்.

தலைநகரில் உள்ள பிர்லா வித்யா நிகேதான், புஷ்ப விஹார் பள்ளிகளில் 10 ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களை மார்ச் மாதம் 8 ம் தேதி 8 மணிக்கேசிறப்பு பிரார்த்தனைகள் நடத்துவதற்காக வருமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கிரின் பீல்டு, சாக்கேட் பள்ளி மாணவர்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைப்பதாக பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சில பள்ளிகளில் ராகு காலம் முடிந்தே தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், குஜராத் நிவாரண நிதி கொடுக்கும் வரை தேர்வு மையங்களுக்குஅனுப்பாமலும் சில பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+