கிரிக்கெட் பந்து தலையில் மோதி சிறுவன் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே கிரிக்கெட் விளையாடிய சிறுவனின் தலையில் பந்து விழுந்ததில் அவர் இறந்து போனார்.
கோவை குனியத்தூரில் உள்ள பி.கே புதூரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சரவண குமார் (15). இவர்பள்ளி முடிந்தவுடன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றார். அங்கு உற்சாகத்தில் அனைவரும்கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது மேலே சென்ற ஒரு பந்தை பிடிக்க சரவணக்குமார் முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாகசரவணக்குமாரின் தலையில் பந்து விழுந்தது.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைபலனின்றி இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications