குஜராத்துக்கு கோவை அதிக நிவாரணநிதி
கோவை:
குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ரூ. 3 கோடி ரூபாய் அளித்து தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் மாவட்டமாககோவை மாவட்டம் திகழ்கிறது என கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கூட்டு குடிநீர் திட்டத் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் மாவட்டகலெக்டர் சந்தானம், தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழகத்தில் தலைசிறந்த மாவட்டமாக கோவை மாவட்டம் மாறி வருகிறது. பொள்ளாச்சியில் 67 கோடி ரூபாய்செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம்ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கோவை மாவட்டத்திற்குகிடைத்துள்ளது. இந்த குடிநீர் திட்டத்திற்கு 45 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
கோவை ஆர்.எஸ் புரத்தில் அமைந்துள்ள உழவர் சந்தை நாள் ஒன்றிற்கு தமிழகத்திலேயே அதிக அளவாக 170டன் காய்கறிகள் மாதம் ஒன்றிற்கு விற்பனையாகிறது. நாள் ஒன்றிற்கு 15 லட்ச ரூபாய் வரை விற்பனையாகிறது.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்திலேயே அதிக நிதியாக ரூ.3 கோடி ரூபாய்அளித்துள்ளது என்றார் மாவட்ட கலெக்டர் சந்தானம்.
விழாவில் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் கோ.சி மணி, மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர்பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications