விதவையை கர்ப்பிணியாக்கிய சாமியார்!

Subscribe to Oneindia Tamil

கரூர்:

பில்லி சூனியம் போக்குவதாகக் கூறி, விதவைப் பெண்ணை கர்ப்பிணியாக்கிய சாமியாருக்கே அப்பெண்ணைபோலீசார் திருமணம் செய்து வைத்தனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் செல்லிபாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமியின் மகள் சூடாமணி (27). இவருக்கும்வெங்கடாசலம் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தநான்கு மாதத்தில் அவரது கணவர் இறந்து போனார்.

மனம் உடைந்த சூடாமணி மனம் பித்துப் பிடித்தவர் போல இருந்து வந்தார். இதனால் அவரது பெற்றோர்கள்பில்லி சூனியம் காரணமாகத் தான் இப்படி இருந்து வருகிறார் எனக் கூறி, மாயனூர் அருகே உள்ளசின்னமநாயக்கனூருக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சேகர் (25) என்ற மந்திரவாதி பில்லி சூனியத்தை போக்க ஓரிரு நாட்கள் போதாது. தொடர்ந்து வரவேண்டும் எனக் கூறி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து சூடமணியின் பெற்றோர்களுடன் அடிக்கடி சாமியாரிடம் வந்து சென்றனர். அப்போது சேகர்சூடாமணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இதனால் சூடாமணி கர்ப்பம் அடைந்துள்ளார். எனவே சிறிது நாட்களுக்குப் பின்னர் சாமியாரிடம் சூடாமணிதன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால், சேகர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் சூடாமணி 8 மாதம் கர்ப்பமாக இருந்தார். இது குறித்துபோலீசாரிடம் சூடாமணியின் பெற்றோர்கள் புகார் செய்தனர்.

போலீசார் இருவரையும் அழைத்து திருமணம் செய்து வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+