ஊட்டியில் கோடைவிழா
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
ஊட்டியில் கோடை விழா வரும் மே மாதம் 13 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி சீசனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா, பழக்கண்காட்சி, மலர்க் கண்காட்சி ஆகியவை நடக்கும். இந்த விழாவை இந்த ஆண்டுநடத்த ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாஹூ தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஊட்டி சீசனை முன்னிட்டு கோடை விழாவை வரும் மே மாதம் 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.விழா ஊட்டி படகு இல்லத்தில் நடத்தப்படுகிறது. இதில், பல மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு நாளும் நடக்கவுள்ளது.
விழாவிற்கான அதிகாரப் பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாஹூ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications