அப்பாவை அடித்துக் கொன்ற மகன், மருமகள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
சொத்து தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன், மற்றும் மருமகளைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்ட்ம நெகமம் அருகே உள்ள வெள்ளணைப் பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (60). இவரது மகன்கோபால்சாமி, இருவருக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த தகராறு கடந்த பிப்.23ம்தேதி கைகலப்பில் முடிந்தது.
இதையடுத்து, ராமசாமியைத் திடீரென காணவில்லை. அவரைத் தேடி அலைந்த பின்னர் சாக்குப்பை ஒன்றில்கட்டப்பட்ட பிணத்தை திப்பம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் போலீசார் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள தகராறு பற்றி போலீசார்கேள்விப்பட்டனர். கோபால்சாமியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரையும் அவரது மனைவிசெல்வியையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications