குஜராத்துக்குத் தமிழகம் ரூ 30 கோடி நிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ரூ 30 கோடி அளித்துள்ளது தமிழக அரசு.

ஜனவரி மாதம் 26-ம் தேதி குஜராத்தில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலலட்சக்கணக்கானோர் வீடு, உடைமைகள் இழந்து தவித்து வருகின்றனர்.

பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக முதலில் தமிழக அரசு ரூ 5 கோடியும், அதன் பின் 5.62 கோடி அனுப்பியது அத்துடன் போர்வை,மருந்து பொருட்கள் போன்றவையும் அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மூலமாக மேலும் ரூ 30 கோடியை குஜராத் நிவாரண நிதியாக முதல்வர் அனுப்பி வைத்துள்ளார். இதற்காகாசோலையை முரசொலி மாறனிடம் முதல்வர் ஒப்படைத்தார். அதை அவர் பிரதமரிடம் ஒப்படைப்பார்.

இதனுடன் சேர்த்து தமிழகம் மொத்தம் ரூ 40.764 கோடி நிவாரண உதவி அளித்துள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+