167 இடங்களில் தி.மு.க. போட்டி
சென்னை:
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளல் தி.மு.க. மொத்தம் 167 இடங்களில் போட்டியிடும் என அக் கட்சியின் தேர்தல்கமிட்டித் தலைவர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
மீதமுள்ள 67 இடங்கள் கூட்டணிக் கடசிகளுக்கு ஒதுக்கப்படும் என்றார்.
திமுக தலைமையகமான அறிவாலயத்தில் அவர் கூறியதாவது:
கடந்த தேர்தலில் மொத்தம் 167 இடங்களில் தி.மு.க. வென்றது. இந்த தொகுதிகள் அனைத்திலும் தி.மு.கவே மீண்டும்போட்டியிடும். மீதமுள்ள தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.
எம்.ஜி.ஆர். அதிமுக தலைவர் திருநாவுக்கரசு எங்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் கட்சிக்கு பலம் உள்ளதொகுதிகளை அடையாளம் கண்டு தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியுடன் பேசிய பின்னர் தான் அவருக்கு எத்தனைஇடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரியும்.
திருநாவுக்கரசுவின் சார்பில் அவரது கட்சியைச் சேர்ந்த முனு ஆதி, என்.எஸ். ராமச்சந்திரன், ஆஸ்டின் ஆகியோர் எங்கள்கமிட்டியுடன் ஆலோசனை நடத்தினர்.
அதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இன்று பேச்சு நடத்திவிட்டுச் சென்றார்.
13ம் தேதி இறுதி சீட் பகிர்வு அறிவிப்பு:
கூட்டணிக் கடசிகளுடன் வரும் 13ம் தேதி சீட் பகிர்வு குறித்த இறுதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதையடுத்த இரு நாட்களில்ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடம் என்பது அறிவிக்கப்படும் என்றார்.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதாவுககு 23 இடங்களை கருணாநிதி ஒதுக்கியுள்ளார். எனவே மீதமுள்ள 44இடங்கள் தான் மதிமுக, புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், எம்.ஜி.ஆர். அதிமுக, ஆர்.எம். வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம்,வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜிவ் காங்கிரஸ, ராமதாசிடம் இருந்து சண்டைபோட்டு பிரிந்து வந்த தீரனின் தமிழ்பா.ம.கா, குமரி அனந்தனின் தொண்டர் காங்கிரஸ், உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் பல சிறு சிறு கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.
அதிமுக கூட்டணியிலும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அதிமுகவால் சுமார் 140 இடங்களில் தான் போட்டியிடமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications