வேஷம் போடும் கருணாநிதி: ஜெ.புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி ஊழலை எதிர்ப்பதாக கூறுவது வெளி வேஷம் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.

அவர்கள் இருவரையும் கருணாநிதி, தி.மு.க. தலைமையிலான அணியில் இணைத்துக் கொண்டிருப்பது, அவர் ஊழலை எதிர்ப்பதாக கூறுவது ஏமாற்று வேலைஎன்பதற்கு சான்று.

கண்ணப்பனும், கு.ப. கிருஷ்ணனும் கருணாநிதியை ஆதரித்ததால் அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள். அவர்கள் மேல் நடவடிக்கை எதுவும் இதுவரைஎடுக்கப்படவில்லை. அவரை ஆதரிக்காதவர்கள் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டு பழி வாங்கப்படுகிறார்கள்.

கண்ணப்பன் அ.தி.மு.க அமைச்சரவையில் முக்கிய துறைகளான பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர். அவர் தான் நிலக்கரிஇறக்குமதி ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இவர் தண்டிக்கப்படாததால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைக்கப்பட்டுள்ளதாக கருணாநிதி கூறி வருகிறார்.

கண்ணப்பனையும், கு.ப. கிருஷ்ணனையும் தனது அணியில் இணைத்துக் கொண்டு ஊழலை எதிர்த்து போராடுவதாக கூறி மக்களை ஏமாற்றி வருகிறார் எனகூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+