வாஜ்பாய் அரசு மீது நம்பிக்கை உள்ளது: கருணாநிதி
சென்னை:
வாஜ்பாய் அரசு மீது தமிழக அரசும், தி.மு.க வும் பரிபூரண நம்பிக்கை வைத்திருக்கிறது என தமிழக முதல்வரும். தி.மு.க.தலைவருமான கருணாநிதிகூறியுள்ளார்
ஆயுத பேர ஊழலில் ஈடுபட்டதாக பா.ஜ.க தலைவர் பங்காரு லட்சுமணன், சமதா கட்சி தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் ஆயுத பேர ஊழலில்ஈடுபட்டிருப்பதாக தெகல்கா டாட் காம் என்ற இன்டர் நெட் நிறுவனம் வீடியோ படங்களை ஆதாரமாக வெளியிட்டு குற்றம் சுமத்தியது.
இதுகுறித்து தமிழக முதல்வரிடம் நிருபர்கள் கேட்டபோது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர்வாஜ்பாயும், உள்துறை அமைச்சர் அத்வானியும் கூறியிருகிறார்கள்.
பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன் குற்றம் சாட்டப்பட்டதும் பதவி விலகி விட்டார். இது பாராட்டத்தக்கது. மத்திய அரசு எதையும் மறைக்கநினைக்கவில்லை. குற்றச்சாட்டுகள் குறித்து முழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடும் என கூறப்பட்டிருக்கிறது.
மேலும் இது குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் பெர்னான்டசுக்கும் ஆயுத பேர ஊழலில்சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. விசாரணை மூலமே உண்மைகள் தெரிய வரும்.
இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு காரணமாக வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படாது. இந்தகுற்றச்சாட்டு தி.மு.க.வை எந்த விதத்திலும் பாதிக்காது.
இவ்வாறு கருணாநிதி நிருபர்களிடம் கூறினார்.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
