பெர்னான்டஸ் ராஜினாமா செய்ய பத்திரிக்கைகள் தலையங்கம்
டெல்லி:
பாதுகாப்புத்துறை ஊழலுக்கு பொறுப்பேற்று ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என பத்திரிகை துறையும் தனது பங்கிற்கு கோரியுள்ளது.
பெர்னானடஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த வாஜ்பாய் அரசிற்கு மற்றொரு இடத்திலிருந்துநெருக்குதல் வந்துள்ளது.
இந்திய பத்திரிகைகள் பலவற்றின் தலையங்கப் பகுதிகளில் பத்திரிகையாளர்கள் பலர் இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பெர்னான்டஸ் ராஜினாமா செய்யவேண்டும் என கோரியுள்ளனர்.
வாஜ்பாய் அரசு இந்த ஊழல் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இருந்தாலும் இந்த ஊழலுக்கு பொறுப்பேற்பது யார் எனகேள்வி எழுப்பியுள்ளார் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் சேகர் குப்தா.
ஹிந்துஜா விவகாரத்தில் பிரிட்டன் மந்திரி பீட்டர் மாண்டல்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததை நினைவில் கொள்ள வேண்டும். வாஜ்பாய் அரசு தனதுபாதுகாப்பு மந்திரியை காப்பாற்ற முயற்சி செய்தால் பாதிக்கப்பட போவது வாஜ்பாயும் அவருடைய அரசும் தான் என குற்றம்சாட்டியுள்ளார் சேகர்குப்தா.
ஹிந்து: ஊழல் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள போது ராணுவ அமைச்சர் மற்றும் பதவியில் நீடிப்பது வாஜ்பாய் அரசின்போலித்தனமான நடவடிக்கை என குறை கூறுகிறது ஹிந்து பத்திரிகை.
இந்த ஊழல் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்கு ஏற்பட்ட அவமானம். தனது துறையில் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரைசம்பந்தப்பட்டுள்ள இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பெர்ணாண்டஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என ஹிந்து பத்திரிகை கோரியுள்ளது.
தனது துறை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை ஆணையர் விசாரிக்க பெர்ணாண்டஸ் கடந்த ஆண்டுதான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் அரசியல்வாதிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ள ஆயுத பேர ஊழலை தெகல்கா டாட் காம் நிறுவன நிருபர்கள்தோலுரித்து காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு அமைச்சர் தனிப்பட்ட முறையில் இந்த ஊழலில் சம்பந்தப்படவில்லை. எனினும் அவருடைய கட்சியின் தலைவரான ஜெயா ஜெட்லி இதில்சம்பந்தப்பட்டிருக்கிறார். அரசியல் ரீதியாக இதற்கு பெர்னானடஸ் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என கோருகின்றது ஹிந்து பத்திரிகை.
ஹிந்துஸ்தான் டைம்ஸ்:இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பெர்னான்டஸ் ராஜினாமா செய்ய முன் வந்ததாக கூறப்படுகிறது. அதனை பிரதமர் தடுத்ததாககூறப்படுவது உண்மையெனில், வாஜ்பாய் மிகப்பெரிய தவறு செய்து விட்டார்.
தனது துறையில் ஊழல் தலைவிரித்தாடும் அளவிற்கு நிர்வாகம் செய்துள்ளார் பெர்னான்டஸ் என குற்றம் சாட்டுகிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை.
ஏஸியன் ஏஜ்:சமதா கட்சித்தலைவர் ஜெயா ஜெட்லியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசும் இணைந்து ஆயுதங்கள் வாங்குவதில் ஊழல்செய்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தது. இதனை நிரூபிக்கும் விதமாக வெப்சைட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் உள்ளன எனதெரிவித்துள்ளது ஏஸியன் ஏஜ் பத்திரிகை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications