ஜனாதிபதியை சந்திக்கிறார் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாட்டை உலுக்கியுள்ள பாதுகாப்புத்துறை ஊழல் குறித்து ஜனாதிபதி கே.ஆர்.நாராயணணை சந்தித்து விளக்குகிறார் பிரதமர் வாஜ்பாய்.
வியாழக்கிழமையன்று மாலை 6மணிக்கு ஜனாதிபதியை சந்திக்க உள்ள பிரதமர்,டெஹல்கா டாட் காம் இன்டர்நெட் நிறுவனம் வெளிப்படுத்திய ஆயுதபேர ஊழலால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து எடுத்துரைக்கிறார்.
இந்த பிரச்சனையால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி மற்றும் அரசின் நிலை குறித்தும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட உள்ளது.
ஊழல் பிரச்சனை தொடர்பாக தனது மூத்த அமைச்சர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் பிரதமர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications