தொகுதி பங்கீடு: திமுக - மதிமுக பேச்சுவார்த்தை முடிந்தது
சென்னை:
தி.மு.க. தேர்தல் பணிக்குழுவினர் ம.தி.மு.க.வுடன் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து நடத்திய பேச்சு வார்த்தை புதன்கிழமை முடிவடைந்தது. ஆனால்ஒப்பந்தம் எதுவும் முடிவாகவில்லை.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழககத்தில் ஆளும் தி.மு.க.கட்சி தலைமையில் தே.ஜ. கூட்டணி தேர்தலில்போட்டியிடுகிறது. தி.மு.க. தனது தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் முக்கிய கட்சியான பா.ஜ.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை முடிந்து. பா.ஜ.க வுக்கு 23 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிமுகவுடன் பேச்சுவார்த்தை:
இந்நிலையில் மற்றொரு தோழமை கட்சியான ம.தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு குறித்த இரண்டாவது கட்ட பேச்சுவார்ததை தி.மு.க.தேர்தல்பணிக்குழு தலைவர் ஆற்காடு வீராசாமியுடன் நடந்தது
பேச்சுவார்த்தை முடிவடைந்தாலும் தொகுதி பங்கீடு குறித்து எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய ஆற்காடுவீராசாமி கூறியதாவது:
தொகுதி பங்கீடு குறித்த இறுதி முடிவு ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசிய பின் எடுக்கப்படும் என்றார்.
பேச்சு வார்த்தைக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய ம.தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் கணேசன் கூறுகையில், பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றது.எத்தனை தொகுதிகள் கேட்டோம் என்பது குறித்து கூற விரும்பவில்லை. பா.ஜ.க.வுக்கு அளிக்கப்பட்டுள்ள 23 தொகுதிகளை விட அதிக தொகுதிகள்கேட்டுள்ளோம்என்றார்.
புதிதாக தொடங்கப்பட்ட தொண்டர் காங்கிரஸ் கட்சி தலைவர் குமரி அனந்தனுடனும் ஆற்காடு வீராசாமி தொகுசி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தைநடத்தினார்.
அனைத்து தோழமை கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை இந்த வார இறுதிக்குள் முடிவடைந்து விடும் என ஆற்காடு வீராசாமிகூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications