டெஹல்கா நிறுவனத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆயுதப் பேர ஊழல் வழக்கை அம்பலப்படுத்திய டெஹல்கா டாட் காம் இன்டர்நெட் நிறுவனத்துக்குத் தொடர்ந்துதொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருவதையடுத்து அந்த நிறுவனத்தை சுற்றி பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டெல்லி துணைப் போலீஸ் கமிஷனர் காமராஜ் கூறுகையில், டெஹல்கா டாட் காமிற்கு தொலைபேசிமூலம் மிரட்டல் வருவதாகப் புகார் வந்தது. இதையடுத்து அந்த இன்டர்நெட் நிறுவனத்தைச் சுற்றிலும் பலத்தபாதுகாப்பு போட்டுள்ளோம்.
டெஹல்கா டாட் காமில் பணிபுரியும் நிருபர்களுக்கும் தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வருவதாகப் புகார்வந்துள்ளது.
இதையடுத்து சில போலீஸ்காரர்களை டெஹல்கா டாட் காம் நிறுவன வாசலில் நிறுத்தியுள்ளோம். அவர்கள் சுழற்சிமுறையில் இரவும், பகலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications