தொகுதிகள் ஒதுக்கீடு: அதிமுக- கம்யூனிஸ்ட் பேச்சு
சென்னை:
அதிமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 இடங்களில் எந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அதிமுக தேர்தல் பணிக் குழுவுடன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக கூட்டணியில், 8 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து எந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதுஎன்பது குறித்து அதிமுக குழுவினருடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை பேச்சு நடத்தினர்.
அதிமுக தரப்பில் ஓ.எஸ்.மணியன் எம்.பி, முன்னாள் எம்.பி.தம்பி துரை ஆகியோரும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரதராஜன், ரங்கராஜன் ஆகியோர்உள்ளிட்ட குழுவும் கலந்து கொண்டது.
8 தொகுதிகள் எது, வெற்றி வாய்ப்பு என்ன என்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில்இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.












Click it and Unblock the Notifications