தேர்தல் நிதி தர மறுத்தவர்களை தாக்கிய பா.ம.கவினர் கைது
காஞ்சிபுரம்:
தேர்தல் பணிக்கு நிதி தர மறுத்ததற்காக கேஸ் நிறுவன ஊழியர்களை தாக்கிய சம்பவம்தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் அருகே இருக்கும் கண்ணபிரான்புரத்தில் பா.ம.கவின் செங்கல்பட்டுமாவட்ட செயலாளர் புலிக்குடிவனம் ராஜேந்திரன் (37) மற்றும் பா.ம.கவின் உயர்மட்டகுழு உறுப்பினர் ஜானகிராமன் (30) ஆகிய இரண்டு பேரும் 10 தொண்டர்களுடன்தேர்தல் பணிக்கு நிதி திரட்ட புதன்கிழமை சென்றனர்.
கேஸ் நிறுவனம் ஒன்றுக்கு இவர்கள் சென்று தேர்தல் நிதிக்காக ரூ 25,000 கேட்டனர்.அந்த பணத்தை கொடுக்க மறுத்த கேஸ் நிறுவன ஊழியர்களை பா.ம.க. தொண்டர்கள்தாக்கினர்.
இது குறித்து தாக்குதலில் காயமடைந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இந்தபுகாரின் அடிப்படையில் போலீசார் ராஜேந்திரனையும், ஜானகிராமனையும் கைதுசெய்தனர்.
சமீபத்தில்தான் பா.ம.க., தி.மு.க.கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க. கூட்டணிக்குதாவியது. இந்நிலையில் பா.ம.கவினர் மீது வரும் புகார்கள் குறித்து போலீசார்உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications