மின் உற்பத்தி: மேட்டூர் மின் நிலையம் சாதனை

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

மேட்டூர் மின் உற்பத்தி நிலையம், அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்ததற்காக தங்கப் பதக்கம் மற்றும் ரூபாய் 15 லட்சம்ரொக்கம் ஆகியவற்றை பரிசாகப் பெற்றுள்ளது.

இந்த மின்நிலையம், நடப்பாண்டில் 630 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழக மின்வாரியத் தலைவர் பூர்ணலிங்கம், மேட்டூர் மின்நிலையத்தை பார்வையிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மின் உற்பத்தி நிலையங்களைத் தேர்வு செய்து ரொக்கப் பரிசும் பதக்கங்களும் அளித்து வருகிறது. இந்த பரிசு,மின்நிலையத்தின் செயல் திறனில் முழுமையானதாக செயல்பட்டிருக்க வேண்டும். தமிழக மின்வாரியம் இந்த பரிசை முதன்முறாைகப் பெற்றுள்ளது.

கடந்த மாதம் 14ம் தேதி தான் மேட்டூர் மின் உற்பத்தி நிலையம், பரிசுக்குரிய தகுதியைப் பெற்றது. தற்போது, இந்த நிலையத்திற்கு மத்திய அரசின்தங்கப்பதக்கம் மற்றும் ரூபாய் 15 லட்சம் பரிசுத் தொகை ஆகியன கிடைத்துள்ளன.

தூத்துக்குடியில் விரைவில் ஒரு மின்சார உற்பத்தி நிலையம் துவங்கப்படும். இதற்காக ரூ. 2 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.இந்த மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்சார விநியோகம் சீராக இயங்க ஆயிரத்து 200 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மின்சார விநியோகம்திருப்திகரமாக அமைந்துள்ளது. எல்லா இடங்களிலும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.

மின் உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பு 15 லட்சம் டன் உள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

தமிழகத்தில் மின் இணைப்புக் கேட்ட 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். இவ்வாறு 3.25 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மின் விநியோகப்பாதையில் மின் இழப்பு 17 சதவீதமாக உள்ளது என்றார் பூர்ணிலிங்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+