அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு ஐ.எஸ்.ஓ 9002 சான்றிதழ்

Subscribe to Oneindia Tamil

கோவை:

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு சர்வதேச தரச் சான்றிதழ் ஐ.எஸ்.ஓ 9002 வழங்கப்பட்டுள்ளது.

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் படைகலன் நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டிஇந்த தொழிற்சாலையின் துணைப் பொதுமேலாளர்கள் சந்திரன், டாக்டர் சிங் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை 1904 ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் 200 வதுபடைக்கல நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இங்கு ராணுவத்திற்கு தேவையான அனைத்து வெடிமருந்துகளும்தயாராகின்றன.

இந்த வெடி மருந்துகள் பல ஆண்டுகளாக இந்தியாவுடன் போரிட்ட நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. சீனாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும், கார்கில் போரிலும் ராணுவ வீரர்கள்பயன்படுத்திய நவீன ரக வெடிமருந்துகள் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் தயாரானவையே.நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோதெல்லாம், மிக குறுகிய காலத்தில், பெருமளவு வெடிமருந்துகளை உற்பத்திசெய்து இந்த தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது.

இங்கு தயாராகும் வெடிமருந்துகளின் தரம் உயர்ந்துள்ளது. தொழிற்சாலை நவீன மயமாக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு மற்றும் உற்பத்தி யுக்திகளையடுத்து சர்வதேச தரம் வாய்ந்த தொழிற்சாலையாக இந்த பொருள்கள்உயர்ந்துள்ளது. எனவே, ஐ.எஸ்.ஓ 9002 சான்றிதழை இந்த தொழிற்சாலை பெற்றுள்ளது.

இந்த தொழிற்சாலையின் படைக்கல நாள் விழாவில் தளவாடங்கள், துப்பாக்கிகள், பீரங்கிகள் உள்பட பல்வேறுபொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த பொருள் கண்காட்சியை பொது மேலாளர் ஷா துவக்கிவைத்தார். சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த தளவாடக் கண்காட்சி அமைந்திருந்தது.

இக் கண்காட்சியில் 18 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் 130 எம்.எம் பீரங்கி குண்டுகளும், 24 கிலோ மீட்டர்தூரம் சென்று தாக்கும் குண்டுகளும் இடம் பெற்றிருந்தன. இதில் இடம் பெற்ற போபர்ஸ் பீரங்கிகள்பொதுமக்களை அதிகம் கவர்ந்தது.

மேலும் 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையும் தாங்கக் கூடிய உடைகள், அரிய புகைப்படங்கள், உள்படபல்வேறு பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+