தென்னாப்பிரிக்காவில் இந்துமத குருக்களாக பெண்கள் நியமனம்

Subscribe to Oneindia Tamil

டர்பன்:

தென்னாப்பிரிக்காவில் இந்து மத குருக்களாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

தென் ஆப்பிரிக்காவில் இயங்கி வரும் தென்னாப்பிரிக்க இந்திய கலாச்சார அமைப்புஇந்து ஆகம முறைப்படி பூஜைகள் செய்வதற்கும், சடங்குகள் செய்வதற்கும்பயிற்சிஅளித்து வருகிறது. இந்த ஆண்டு தேர்வு நடத்தி தகுதி பெற்றவர்களை மதகுருக்களாக தேர்ந்தெடுத்தது. இதில் தேர்வு பெற்றவர்கள் அனைவரும் பெண்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பு, தென்னாப்பிரிக்க ஆர்ய பிரதிநிதி சபா என்ற பெயரில் 1954-ம்ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பினால் நடத்தப்பட்ட கல்வித் திட்டத்தில்சேர்ந்து தேர்ச்சி பெற்ற 120-க்கும் அதிகமானவர்கள் நாடு முழுவதும் உள்ளகோயில்களில் இந்து ஆகம முறைபடி பூஜைகள் செய்யவும் மக்களுக்கு இந்து ஆகமமுறைப்படி மதசடங்குகள் செய்யம் மதகுருக்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த கல்வித்திட்டத்தின் காலம் 3 ஆண்டு. இதற்கான வகுப்புகள் ஒவ்வொரு வாரமும்நடக்கும். வகுப்புகளை இந்த கலாசார மையத்தில் இருக்கும் மூன்று மதகுருக்கள்நடத்துவார்கள்.

இவர்களில் ராதேஷ் சிங் என்பவர் இந்து ஆகம முறைப்படியான பூஜைகள், சடங்குகள்குறித்து இந்தியாவில் பயிற்சி பெற்று வந்தவர். இங்கு பயில்பவர்கள் மத சடங்குகள்பற்றி நன்கு அறிந்து கொள்கிறார்கள். அதன் பின் இங்கு நடைபெறும் தேர்வில் தேர்ச்சிபெற்ற பின் அவர்கள் மதகுருக்களாக பொறுப்பேற்கிறார்கள்.

இந்த ஆண்டு 4 பெண்கள் பெ மதகுருக்களாக பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள்பண்டிதாஸ் என்று அழைக்கப்படுகின்றனர்.

இது தவிர பொதுமக்களுக்கும் மத சடங்குகள் பற்றிய பாடம் நடத்தப்படுகிறது. இதில்திருமணத்திற்கான சடங்குகள், குழந்தை பிறந்த போது செய்ய வேண்டிய சடங்குகள்,இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் போன்றவற்ற்ைறை எவ்வாறுசெய்வது என்பது பற்றி கற்பிக்கப்படுகிறது.

இந்த கல்வித் திட்டத்தில் படித்து முடித்தவர்கள் யாஜிகாஸ் என பெயரில்நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மேற் கூறிய சடங்குகளை செய்ய தகுதிபெற்றவர்களாகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை 20 பெண்கள் யாஜிகாசாகதேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+