வரதட்சணைக் கொடுமை: கல்லூரி மாணவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கரூர்:

வரதட்சணைக் கொடுமையால் பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் மற்றும்மாமனார்,மாமியார் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி லிங்காபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் என்ற சுப்பையாவின் மகள் சங்கீதா (24). இவரது உறவினர் கரூர் அருகேவீரராக்கியம், வ.உ.சி ரயில்வே காலனியைச் சேர்ந்த மலையாளி மகன் செந்தில்குமார்.

சங்கீதாவுக்கும், செந்தில்குமாருக்கும் கடந்த 99ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து திருமணம் நடந்தது. காதல் திருமணம்என்றாலும், அவருக்கு வரதட்சணையாக ரொக்கப்பணம், நகைகளை பெண் வீட்டார்கள் கொடுத்தனர்.

ஆனால், செந்தில்குமார் வீட்டினர் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர். இதனால், சிறிது நாட்கள் தனது பெற்றோர் வீட்டில்வசித்து வந்தார் சங்கீதா.

இந்த நிலையில் தஞ்சாவூரில் உள்ள மணியம்மை பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டில் அவர் படித்துக் கொண்டிருந்தார். விடுமுறையில் தாய் வீட்டிற்கு வந்திருந்தசங்கீதாவிற்கு செந்தில்குமார் போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதனை நம்பிய சங்கீதா, கணவர் செந்தில்குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வரதட்சணை கொடுமையால் சங்கீதா தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரது மாமியார் சிறும்பாயி, மாமனார் மலையாளி, கணவர் செந்தில்குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+