நிதீஷ் குமாரிடம் ரயில்வே துறை
டெல்லி:
மத்திய விவசாயத்துறை அமைச்சர் நிதீஷ் குமாருக்கு கூடுதல் பொறுப்பாக ரயில்வேதுறையும் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் வாஜ்பாய் கேட்டுக் கொண்டதன்படி, ஜனாதிபதி கே.ஆர். நாராயணன்,நிதீஷ்குமாரை ரயில்வே துறையும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளளுமாறு கூறினார்என ராஷ்டிரபதி பவன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது :
ரயில்வே துறை அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, ஆயுத பேர ஊழல் விவகாரம்தொடர்பாக பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதனால் ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பு காலியாக இருந்தது. தற்போது அந்தபொறுப்பு கூடுதல் பொறுப்பாக நிதிஷ் குமாருக்கு கொடுக்கப்பட்டது.
வாஜ்பாய் அரசின் முந்தைய ஆட்சியின் போது நிதீஷ் குமார் ரயில்வே துறைஅமைச்சராக பதவி வகித்தார். வாஜ்பாய் 1999-ம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்தபோது நிதீஷ் குமார் விவசாயத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
யு,என்.ஐ.












Click it and Unblock the Notifications