த.மா.காவிலிருந்து நீக்கப்படுகிறார் சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கட்சியின்அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

இதுகுறித்து தமாகா தலைவர் மூப்பனார் புதன்கிழமை நடக்கவுள்ள தமாகா செயற்குழுக் கூட்டத்திற்குப்பின் முறையாக அறிவிப்பார் என்று தெரிகிறது.

தமாகாவில் இருந்து கொண்டே வேறு கட்சி ஆரம்பித்த சிதம்பரத்தை ஏன் வெளியேற்றக் கூடாது என்பது குறித்து சிதம்பரத்துக்கு நோட்டீஸ்அனுப்பப்படும் என்றும் தமாகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, சிதம்பரம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவதற்கு வெளிப்படையாக எதிர்ப்புதெரிவித்து வந்தார். அதிமுக வுடனான கூட்டணி குறித்து மூப்பனார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி வந்தார். இதனால் இவர் மேல் கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகப் புகார்கள் எழுந்தது.

சிதம்பரம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறித்தும் புதன்கிழமை கூடும் தமாகா செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

சிதம்பரம் தமாகா அதிமுக வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது குறித்து வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தது குறித்து தமாகா அரசியல் விவகாரக்குழுவும் அதிருப்தி அடைந்துள்ளது. தமாகா தேர்தல் விவகாரக் குழுவினர் சிதம்பரம் மீது அதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் தமாகா வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை அமைத்து திமுக கூட்டணியுடன் ஐக்கியமாகி விட்டார். சிதம்பரத்துக்கு வரும்சட்டசபைத் தேர்தலில் 3 க்கும் மேற்பட்ட இடங்கள் கொடுப்பது குறித்தும் திமுக ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+