எதிர்க்கட்சிகள் அமளி: மீண்டும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
டெல்லி:
நாடாளுமன்றம் தொடர்ந்து 6-வது நாளாக புதன்கிழமையும் ஒத்தி வைக்கப்பட்டது.
தெஹல்கா டாட் காம் இன்டர் நெட் நிறுவனம் பல அரசியல் தலைவர்களும், ராணுவ உயர் அதிகாரிகளும் ஆயுதபேர ஊழலில் ஈடுபட்டதாக வீடியோ ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியது.
இதற்கு பொறுப்பேற்று வாஜாபாய் அரசு பதவி விலக வேண்டும் என வற்புறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டிரியஜனதா தளம் ஆகிய எதிர்கட்சிகயினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைளைநடத்த விடாமல் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
புதன்கிழமை அவை தொடங்கியதும் வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சிகள்மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தொடர்ந்து 6-வது நாளாக அலுவல்கள் எதுவும் மேற் கொள்ளப்படாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!