For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

த.மா.காவிலிருந்து எங்களை நீக்க முடியாது: சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

த.மா.கா. ஜனநாயக பேரவை தலைவர் சிதம்பரம் தன்னையும் தன்ஆதரவாளர்களையும் த.மா.காவிருந்து யாரும் நீக்க முடியாது என கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும். த.மா.கா.தலைவர்களில் ஒருவருமான சிதம்பரம்த.மா.கா.- அ.தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டதால் அக்கட்சியிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற பெயரில்புதிய கட்சியை துவக்கினார்.

தமிழ் மாநில காங்கிரசின் பொதுக்ககு தற்போது கூடி நடந்து வருகிறது. இந்தகூட்டத்தில் கூடி அ.தி.மு.க.---- த.மா.கா. கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீதுநடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிய வருகிறது. தனதுகட்சியின் தலைமை அலுவலகத்தை நுங்கம்பாக்கத்தில் திறந்து வைத்து பேசுகையில்சிதம்பரம் கூறியதாவது:

த.மா.கா. எங்களுக்கும் சொந்தமானதுதான். கட்சிக்காக பாடுபட்டவர்களையும்.தன்மானத்திற்காகவும், நல்ல ஆட்சி அமைய வேண்டும் என பாடுபட்டவர்களைஎப்படி கட்சியிலிருந்து நீக்க முடியும்.

அ.தி.மு.கவுடனான கூட்டணியை எதிர்த்து கடிதம் எழுதிய அனைத்து கட்சிஉறுப்பினரையும் நீக்க முடியுமா?

காங்கிரஸ் கட்சி 1996-ம் ஆண்டு மூப்பனாரை கட்சியிலிருந்து நீக்கியது. இப்போதுகாங்கிரஸ் அவருடன் கூட்டணி அமைத்துள்ளது.

முன்னர் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி,எஸ்.எம்.கிருஷ்ணா போன்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்கு பின் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அ.தி.மு - த.மா.கா. கூட்டணிகூட முறியலாம்.

எங்கள் பேரவை எதிர்ப்பு இயக்கம். தேர்தலில் போட்டியிடுவது எங்கள் நோக்கமல்லஎன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X