பாதுகாப்பு ஊழலுக்கு ஆதாரம் உள்ளது: சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாதுகாப்புத் துறையில் நடந்துள்ள ஊழலுக்குத் தேவையான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. விரைவில்அவற்றை வெளியிடுவேன் என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

கொஞ்ச காலமாக சும்மா இருந்த சுவாமிக்கு ஏதாவது விஷயம் கி டைத்தால் விட மாட்டார். அவை குறித்துஎனக்கு அப்போதே தெரியும் என்று ஆரம்பித்து மக்களைக் குழப்புவார்.

இப்போதும் பாதுகாப்புத்துறை ஊழல் குறித்து தனக்கு அப்போதே தெரி யும் என்று கூறி அது தொடர்பானஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார் சுவாமி.

சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, பாதுகாப்புத்துறையில் ஊழல் நடப்பதுஎனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அப்போதே ஜார்ஜ் பெர்னாண்டஸ் குறித்து நான் புகார் தெரி வித்தேன்.இப்போது அது நிரூபணமாகி விட்டது.

பாதுகாப்புத்துறை ஊழலில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கும், ஜெயா ஜெட்லிக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவதுதவறு. அவர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது.

பாதுகாப்புத்துறையில் விமானங்கள் வாங்கியது உள்பட பல விவகாரங்களில் நடந்துள்ள ஊழலுக்கானஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை உரிய நேரத்தில் வெளியிடுவேன். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ஜார்ஜ் பெர்னாண்டஸை கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு வர முடியாது. அவரால் எந்த வழியிலும், குறுக்கு வழியில் கூட ஆட்சிக்கு வரமுடியாது.

சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு வருவத யாரும் விரும்பவில்லை. அவருக்குப் பதில் வேறு யாராவதுகாங்கிரஸ் சார்பில் பிரமதர் பதவிக்கு அறிவிக்கப்பட்டால் பத்தே நாட்களில் பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்து விட்டுகூட்டணி ஆட்சியை காங்கிரஸ் கட்சி அமைக்க முடியும் என்றார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+