சிதம்பரம் கட்சி தனி சின்னத்தில் போட்டி
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை வரவிருக்கும் தேர்தலில் தனி சின்னத்தில்போட்டியிட இருப்பதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசிலிருந்து பிரந்து தமிழ்மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற கட்சியை துவக்கினார்.
இந்த கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலில்போட்டியிடுவது என முடிவெடுத்தது. இந்த கட்சிக்கு 3 தொகுதிகள்அளிக்கப்படுகிறது எனவும், இக் கட்சி தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில்போட்டியிடும் எனவும் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால் சிதம்பரம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்ததுவிட்டார்.
புதன்கிழமை காலை கட்சியின் தலைமை அலுவலகத்தை சென்னை நுங்கம்பாக்கம்வாலஸ் கார்டன் பகுதியில் புதன்கிழமை திறந்து வைத்தார்.
,அலுவலகத்தை திறந்து வைத்து தன் ஆதரவாளர்களிடம் பேசுகையில், தேர்தலில்போட்டியிடுவது மட்டும் நமது குறிக்கோளல்ல
. தமிழகத்தில் நல்ல ஆட்சி அமைக்கப்பட வேண்டும்ய அதே சமயத்தில் நமதுதன்மானமும், தனித்தன்மையும் மதிக்கப்பட வேண்டும். அவ்வாறு மதிக்கப்பட்டால்நம் கட்சி ஆதரவாளர்கள் வாய்ப்பளிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடலாம்.
ஜெயலலிதா ஆட்சியை விட கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிஎவ்வளவோ சிறந்தது. அந்த ஆட்சியை விட இந்த ஆட்சி நல்லாட்சி தந்தது என்பதில்எனக்குச் சந்தேகம் இல்லை.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவுக்கு ஆதரவு தர என்னால் முடியாது.அந்தக் கட்சியால் நல்லாட்சி தர முடியாது.
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க. அணிக்கு ஆதரவு தருமாறுவாக்காளர்களைக் கேட்டுக் கொள்ளப் போகிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை கிராமங்கள்தோறும், நகரங்கள்தோறும், வட்டார அளவில் துவக்க வேண்டும். நேரடியாக அரசியலில் ஈடுபடாதஅனைவரும் எங்களுக்குத் துணை நிற்க வேண்டும்.
த.மா.கா. ஜனநாக பேரவை பிரமுகர்கள் கூறுகையில் நாங்கள் தி.மு.கவிடம் 7தொகுதிகள் கேட்போம். எங்களுக்கு 5 தொகுதிகள் கொடுக்கப்படும் எனதெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications