28ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி
ஸ்ரீஹரிகோட்டா:
இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மார்ச் 28ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரெங்கன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்மார்ச் 28ம்தேதி மாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் நிறைவு பெற்று வருகின்றன. மார்ச் 26ம் தேதி கவுண்ட் டவுன் துவங்குகிறது. கடைசி நேர சிக்கல்கள்ஏற்பட்டால் ராக்கெட் ஏவப்படுவது 4 மணி நேரங்கள் தள்ளி வைக்கப்படும்.
விண்ணில் செலுத்துவதற்கு தேவையான அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ராக்கெட் நல்ல முறையில் விண்ணில் செலுத்தப்படும் என்றநம்பிக்கை இருக்கிறது.
இந்த ராக்கெட் செலுத்தப்படுவதன் மூலம் 2000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் வசதிகளை கொண்ட நாடுகளின்வரிசையில் இந்தியாவும் சேரும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ
ஜி.எஸ்.எல்.வி.: மார்ச் இறுதியில் விண்ணில் பாயும்












Click it and Unblock the Notifications