குரான் எரிப்பு: வாஜ்பாய், அத்வானி மீது புகார்
டெல்லி:
டெல்லியில் சில நாட்களுக்கு முன் குரான் எரிக்கப்பட்டது தொடர்பாக பா.ஜ.கவைஇந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் (எஸ்.ஐ.எம்.ஐ) குற்றம் சாட்டியுள்ளது.
கான்பூரில் நடந்த மத கலவரங்களில் இந்த எஸ்.ஐ.எம்.ஐ. அமைப்புக்குதொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந் நிலையில் டெல்லியிலும்அம்ரிஸ்தரிலும் குரான் எரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் பா.ஜ.க. மீது இந்தஅமைப்பு கடும் பதில் குற்றம் சாட்டியுள்ளது.
குரான் எரிப்பை பிரதமர் வாஜ்பாயும், உள்துறை அமைசர் அத்வானியும்ஊக்குவித்ததாக இந்த அமைப்பு கூறுகிறது.
இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த எஸ்.ஐ.எம்.ஐ-ன் பொதுச் செயலாளர்சஃப்தார் நகோரி கூறியதாவது:
மார்ச் 5-ம் தேதி குரான் எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆனபிறகும் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பிரதமர் வாஜ்பாய்.கூறினார். இதன் மூலம் அரசு அந்த விஷயத்தை மூடி மறைக்க முயல்கிறது என்பதுதெளிவாகிறது.
வாஜ்பாயும், அத்வானியும் இது போன்ற சம்பவங்களை ஊக்குவிக்கின்றனர். அந்தசம்பவங்களை மூடி மறைக்க முயல்கின்றனர். இந்த விஷயத்திற்கு இரு தலைவர்களும்பொறுப்பேற்க வேண்டும்.
குரான் எரிப்பில் தொடர்புடைய விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள்அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும்.
தலிபான் அரசு புத்தர் சிலையை இடித்த விவகாரத்தில் உருவ வழிபாடு பற்றிமுழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும். அதன் பின்பே புத்தர் சிலை உடைப்புசரியா, தவறா என முடிவு செய்யப்பட வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications