ஓட்டு போட அடையாள அட்டை தேவையில்லை
சென்னை:
தமிழகத்தில் 30 சதவீதம் பேருக்கு இன்னும் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படாத காரணத்தால்அவர்கள், அடையாள அட்டை இல்லாமல் வேறு ஆதாரங்களைக் காட்டி ஓட்டுப் போடுவதற்கான வழிவகைகள்குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
தலைமைத் தேர்தல் கமிஷனர் எம்.எஸ்.கில், ஒரு நாள் பயணமாக திங்கள்கிழமை சென்னை வந்தார். தேர்தல்அதிகாரிகள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் அவர்ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில், வாக்காளர் அடையாள அட்டைகளைமுழுமையாக விநியோகிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தலுக்குள் இதைமுடிக்க முடியாவிட்டால், மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
இப்போதைய சூழ்நிலையில், தேர்தலுக்குள் அடையாள அட்டைகளை விநியோகிக்க முடியாது என்றே நான்கருதுகிறேன்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேட்பாளர்கள், தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக செல்வதற்கு தேர்தல் கமிஷன்தடை விதித்துள்ளது.
தேர்தலின்போது பிரமாண்டமான கட் அவுட் வைப்பது, வேட்பாளர்கள், வேட்புமனுக்கள் தாக்கலின் போதுஊர்வலமாக செல்வது போன்றவை தடை விதிக்கப்படும்.
தனியார் சாட்டிலைட் சானல்கள், தமிழகத்தில் அதிகம் உள்ளன. தேர்தல் காலத்தின்போது இவற்றின்செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
தேர்தல் பிரசார நேரத்தை அதிகரிக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து டெல்லிசென்றதும் பரிசீலிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications