இந்திய மக்கள் தொகை 102 கோடியை தாண்டியது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்... இந்தியாவின் மக்கள் தொகை 102 கோடியைதாண்டிவிட்டது.

கொஞ்சம் மூச்சு விடுங்கள்... நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, இந்தஆண்டு பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் நடைபெற்றது.

மக்கள் கணக்கெடுப்பு முடிவுகளை மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனர் ஜே. கே.பாந்தியா டெல்லியில் வெளியிட்டார்.

அதன் விவரம்:

இந்த மாதம் 1-ம் தேதி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 102 கோடியை தாண்டியுள்ளது. இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை102 கோடியே 70 லட்சத்து 15 ஆயிரத்து 247 ஆகும்.

இதில் ஆண்கள் 53 கோடியே 12லட்சத்து 77 ஆயிரத்து 78 பேர். பெண்கள் 49கோடியே 57 லட்சத்து 38 ஆயிரத்து 169 பேர்.

எந்த சென்சசிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு படித்தவர்களின் எண்ணிக்கையும்அதிகரித்துள்ளது.1991-ம் ஆண்டு நாட்டில் படித்தவர்ளின் எண்ணிக்கை 52.21சதவீதமாக இருந்தது. 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 65.38சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

படித்தவர்கள் அதிகமாக உள்ள மாநிலமாக தொடர்ந்து கேரளாவே நீடித்து வருகிறது.இரண்டாவது இடத்தை மிஜோரம் பிடித்துள்ளது. இந்த இரண்டாவது இடத்தில் முதலில்தமிழகம் இருந்தது.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் முதல் இடத்தை கேரளா பெற்றுள்ளது.தமிழகம் இரண்டாவது இடத்தையும், ஆந்திரா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

பெண்கள் அதிகமாக உள்ள மாநிலமும் கேரளாதான். அங்கு 1000-ம் ஆண்களுக்கு1058 பெண்கள் உள்ளனர். பெண்கள் குறைவாக இருக்கும் மாநிலம் ஹரியானா.அங்கு 1000-ம் ஆண்களுக்கு 861 பேர் பெண்கள் உள்ளனர். நாடு முழுவதும்பார்க்கும் போது 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் உள்ளனர்.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால்நாட்டில் குழந்தைகள் பிறப்பதும் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியமக்கள் தொகையில் 18 கோடி பேர் புதிதாக சேர்ந்துள்ளனர்.

மக்கள் தொகையில் முதலிடத்தை உத்திரபிரதோம் பெற்றுள்ளது. இங்கு 16.6 கோடிபேர் இருக்கிறார்கள். இது பாகிஸ்தானின் மக்கள் தொகையைவிட அதிகமானதுஎன்பது குறிப்பிடத்தக்கது. (எப்போது திருந்தும் உ.பி.?)

இரண்டாவது இடத்தை மகாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தை பீகாரும்பிடித்துள்ளன.

மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக உள்ள மாநிலம் மேற்கு வங்காளம். இங்கு 1 சதுரகிலோமீட்டருக்கு 904 பேர் வசிக்கிறார்கள். தேசிய அளவில் 1 சதுர கிலோமீட்டருக்கு324 பேர் வசிக்கிறார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 20 நாட்கள் நடைபெற்றது. இந்த பணியில் 2 கோடிபேர் ஈடுபடுத்தப்பட்டனர். நாடு முழுவதிலும் ஆறரை லட்சம் கிராமங்களிலும், 5ஆயிரத்து 500 நகரங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. இதற்குமத்திய அரசு ரூ. 1000 கோடி செலவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+