மீண்டும் தி.மு.க.- ம.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு: கோபமாக வெளியேறிய வைகோ
சென்னை:
முதலில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கியதால் திமுக மீது மதிமுக அதிருப்தி தெரிவித்துஇரு கட்சிகளும் மோதிக் கொண்டன. இப்போது எந்தெந்த தொகுதிகள் யாருக்குஎன்பதிலும் இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.தலைமையில் போட்டியிடும் தே.ஜ கூட்டணிகட்சிகளுக்கு தொகுதிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
திங்கள்கிழமை இரவு தி.மு.க.- ம.தி.மு.க. இடையே தொகுதிகளை அடையாளம் காண்படுகுறித்த பேச்சுவார்த்தை தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதிக்கும்,ம.தி.மு.க.தலைவர் வைகோவுக்கும் இடையே நடைபெற்றது.
இந்த பேச்சு வார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பேச்சவார்த்தைமுடிந்ததும் வைகோ கோபமாக வெளியேறி சென்று விட்டார்.
தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்ததி.மு.க. தேர்தல் குழு தலைவர் ஆற்காடு வீராசாமி கூறுகையில், ம.தி.மு.கவுக்கு 21தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
அவர்கள் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக 43 தொகுதிகளின் பட்டியலை கொடுத்தனர்.அதிலிருந்து 18 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
ம.தி.மு.க. கேட்ட 3 தொகுதிகள் கூட்டணியில் உள்ள மற்ற தோழமைகளுக்கு முன்னரேஒதுக்கப்பட்டு விட்டதால அந்த தொகுதிகளை ம.தி.மு.கவுக்கு ஒதுக்க இயலவில்லை.
இந்த விஷயம் குறித்து கட்சி தலைவர்களுடன் கலந்து பேசிய பின் இரண்டு நாட்களில்பதில் கூறுவதாக வைகோ கூறியுள்ளார்.
புதிய நீதிக்கட்சியிலிருந்து தொகுதி பங்கீடு குறித்து யாரும் பேச்சு வார்த்தை நடத்தவரவில்லை. அவர்கள் கேட்ட 12 தொகுதிகளை ஒதுக்க முடியாது.
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தலைவர் திருநாவுக்கரசு தங்கள் கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அவருக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கவதற்காகமற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகுதிகளை குறைக்கும் வாய்ப்புஎதுவும் இல்லை.
இது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பும் இல்லை என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications