டெல்லியில் நடுரோட்டில் ரவுடி சுட்டுக்கொலை
டெல்லி:
பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த 35 வயது குற்றவாளி, டெல்லியின் தெற்குப் பகுதியில் நீதிமன்றத்தில் ஆஜராகவந்த போது, நடு ரோட்டில் அடையாளம் தெரியாத 3 பேரால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து டெல்லி தெற்குப் பகுதி இணை போலீஸ் கமிஷனர் அமோத் காந்த் கூறியதாவது:
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுஹைல் அகமது. வயது 35. இவர் கொலை, கொள்ளை மற்றும் கடத்தல்தொடர்பாகப் பல வழக்குகளில் உத்தர பிரதேச போலீசாரால் தேடப்பட்டு வந்தவர். இவர் பகுஜன் சமாஜ்வாடிகட்சியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இவரது மனைவி ரஸியா சுல்தான் உத்தரப் பிரதேசத்தில் அலிகார் தொகுதியில் மேயர் பதவிக்காகத் தேர்தலில்நின்றார். ஆனால் தோல்வியடைந்தார்.
இவரது கொலைக்குப் பின்னணியில் அரசியல் பகை எதுவும் காரணமாக இருக்க முடியாது. இன்னொரு ரவுடிக்கும்பலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் நடந்த கொலை என்றுதான்சந்தேகிக்கப்படுகிறது.
அகமது டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள ஓஹ்லா விலிருந்து தன் நண்பர் துலேராவுடன் தனது கார் மூலம்டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள நீதிமன்றத்துக்குச் சென்று கொண்டிருந்தார்.
கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய இவர், அந்த வழக்கு குறித்தான விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது.
இந்தக் கொலை சரியாக காலை 9 மணிக்கு ஆஸ்ரம் சவுக் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்பகுதியில் நடந்தது. ஆனால் கொலையாளிகளைப் பிடிப்பதற்கு முன் அவர்கள் அவ்விடத்திலிருந்து தப்பித்துவிட்டனர் என்றார்.
டெல்லியின் தெற்குப்பகுதி துணை கமிஷனர் காமராஜ் கூறுகையில், அகமது மற்றும் அவரது நண்பர் துலேரா ஆகியஇருவரும் சேர்ந்து ஆஸ்ரம் சவுக் பகுதியை அடைந்த போது இந்தக் கொலைச் சம்பவம் நடந்தது.
அகமதுவின் வயிற்றிலும், மார்பிலும் 3 குண்டுகள் பாய்ந்தன. அவரது நண்பர் துலாரேவுக்குத் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துலாரேவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைபெற்றுக் கொண்டு மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டார் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications